Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, 12 October 2009

நாட்டு நடப்பு





எண்ணிக்கொண்டிருந்த வரதட்சணை
தொகை குறைவாக இருந்ததால்
கல்யாணத்தை நிறுத்திய சம்பந்தி வீட்டார்
இப்போது கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் .



போனஸ் பிரச்சனை பற்றி
நீண்ட நெடிய விவாதத்திற்கு பிறகு
சுமூக தீர்வு ஏற்பட்டது
சங்க தலைவருக்கு மட்டும்--- தனியாக




தமிழக வாக்காளர்களின்
தற்போதிய விலை நிலவரம்
தலைக்கு ஒரு லட்சம் காசுகள் .





தங்களை விலை மாதராய்
சித்தரித்ததை  எதிர்த்து
நீதி கேட்டு மேடையில் முழங்கிய
நடிகையின் மனதில் ஏகமாய் பதற்றம்
எட்டு மணிக்குள்  மந்திரியின்
அந்தரங்க  பங்களாவுக்கு
போயாக வேண்டுமே என்று...



 
இலவசம் ஏதும் அறிவிக்கப்படாத
தேர்தல் நடப்பதாக  கனவு கண்ட
அப்பாவியான நேர்மையான வாக்காளன் .


- சே. தரணி குமார்.             

Saturday, 3 October 2009

ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் .......

சிறியதும் பெரியதுமாய்
எத்துணை எத்துணை
இகழ்ச்சிகள்? புறக்கணிப்புகள்? அவமானங்கள்?
இன்ன பிற யாவையுமே
ஏன் என்னை மட்டுமே நோக்கி
வரிசையாய் படையெடுத்து வருகின்றன?




என்
விதியின் வரிகளில் அதிகம்
விரிசல்கள் காணப்படுகின்றனவா?
கடவுளின் அதீத கோபத்தின்
காரணமாகவா?
சுற்றமும் நட்பும்  என்னை
சுமையாக நினைக்கின்றனவா?
அலை அலையாய் என்னுள்
ஆயிரம் கேள்விகள்




என் ஒவ்வுறு பிடிமானமும்
எத்துணை சுலபமாய் நழுவி விடுகிறது?
வறண்ட பாலையாய் வாழ்க்கை
திரும்பும் திசையெங்கும் திணறல்கள்
என்னை கண்டு எனக்கே பாவமாக படுகிறது
சூழ்நிலைகள் என்னை
சூறாவளியாய்   தாக்குகிறது




மௌனமாய் என் மனம்
அழுதுகொண்டே இருக்கிறது
ஆற்றுவதும் தேற்றுவதும்
அரிதான காரியமாகிவிட்டது
எனக்கென்று என்னிடம்
எதுவுமே இல்லை
தாமரை  இலை தண்ணீராய்
எனக்கு உலகம்




என் நட்புகளுக்கு
எனக்கு பிடித்ததை விட
எனக்கு பிடிக்காததையே 
அதிகம் பிடித்திருக்கிறது
சறுக்கல்கள் எங்கு ஆரம்பம் என்று
சற்றும் புரியவில்லை




சிக்கல் நிறைந்த நூல்கண்டாக மனம்
கருணையும் அன்பும் என் என்னிடம் மட்டும்
காண்பிக்கபடுவதே இல்லை?
நான் என்ன
அன்பிற்கு அப்பாற்பட்டவனா?
மரக்கட்டையாய் என்னை சமூகம்
மருதலிக்கிறதே




என் சுயநலம்
எவரையும் காயபடுத்தியது இல்லை
மற்றவர்களின் பொதுநலம் தான்
என்னை பலமுறை காயப்படுத்தி இருக்கிறது
இனியாவது இந்த உலகம்
எனக்காக செவி சாய்க்குமா?
எனக்கு மட்டுமே  இது விடை தெரியாத கேள்வி




கரையும் மெழுகாய் கணபொழுதுகள்
முழுமையாய் இருள் சூழும் முன்பே
கண்டெடுக்க முடியுமா
நான் தவறவிட்ட மனதை?


    
-சே. தரணி குமார்



Thursday, 1 October 2009

பிரிவு

ஒரு பட்டுப்போன நட்பின்
வேர்களில் எப்போதும் 
மிச்சமிருக்கும் ஒருசில
நினைவெண்ணும் நீர்த்துளிகள்


நட்பின் மரணம் நன்பர்களின்
மரணத்தை விட சோகமானது என்பது
பிரியும் நேரங்களில்
பலருக்கும் புரிவதில்லை






பழைய நினைவு அலைகளில்
நிற்க முடியாமல் தவிக்கும்


எத்தனையோ இதயங்கள்
மீண்டும் நட்பு துளிர்க்காதா
என்று ஏங்கும்


உண்மையான அன்பு எப்போதும்
பகைமை பராட்டு வதில்லை
அவை தற்செயலாய் சூழும்   மேகம் போல
குறுகிய இடைவேளைகளில்
அனைத்தும் மன்னிக்கப்படும்








நீளும் மௌனங்கள்
பாலை நிலத்து பகல்கள்
சுட்டெரிக்கும் நினைவுகளால்
மனம் வெதும்பும்


மறப்பதும் மன்னிப்பதும் தான்
கால சூழற்சியை இன்னும்
துரிதப்படுத்துகின்றன


இதயங்களின் பிரிவு
அணுப் பிளவின் தாக்கத்தைவிட
அதிகம் பாதிக்கிறது









சிலர் மட்டும்
பயணித்த சிறகுகளை
அடியோடு மறந்துவிடுகின்றனர்


பலர் இன்னும்
நீளும் இரவுகளின்
நீளம் குறையாதா
எண்ணும் ஏக்கத்தோடு


கால சக்கரத்தினை
கண் கொட்டாமல் பார்க்கின்றனர்.


- சே. தரணி குமார்

LinkWithin

Related Posts with Thumbnails