Monday, 12 October 2009

நாட்டு நடப்பு





எண்ணிக்கொண்டிருந்த வரதட்சணை
தொகை குறைவாக இருந்ததால்
கல்யாணத்தை நிறுத்திய சம்பந்தி வீட்டார்
இப்போது கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் .



போனஸ் பிரச்சனை பற்றி
நீண்ட நெடிய விவாதத்திற்கு பிறகு
சுமூக தீர்வு ஏற்பட்டது
சங்க தலைவருக்கு மட்டும்--- தனியாக




தமிழக வாக்காளர்களின்
தற்போதிய விலை நிலவரம்
தலைக்கு ஒரு லட்சம் காசுகள் .





தங்களை விலை மாதராய்
சித்தரித்ததை  எதிர்த்து
நீதி கேட்டு மேடையில் முழங்கிய
நடிகையின் மனதில் ஏகமாய் பதற்றம்
எட்டு மணிக்குள்  மந்திரியின்
அந்தரங்க  பங்களாவுக்கு
போயாக வேண்டுமே என்று...



 
இலவசம் ஏதும் அறிவிக்கப்படாத
தேர்தல் நடப்பதாக  கனவு கண்ட
அப்பாவியான நேர்மையான வாக்காளன் .


- சே. தரணி குமார்.             

6 comments:

ஆ.ஞானசேகரன் said...

நல்லாயிருக்கு தொடருங்கள் நண்பரே

என் பக்கம் said...

அருமை தரணி

K said...

Chumma Nachinnu Than Irukku....

யாழிசை said...

திரு.ஞானசேகரனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

யாழிசை said...

நன்றி.பிரதீப்

யாழிசை said...

thankx mr.k

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails