ஒரு பட்டுப்போன நட்பின்
வேர்களில் எப்போதும்
மிச்சமிருக்கும் ஒருசில
நினைவெண்ணும் நீர்த்துளிகள்
நட்பின் மரணம் நன்பர்களின்
மரணத்தை விட சோகமானது என்பது
பிரியும் நேரங்களில்
பலருக்கும் புரிவதில்லை
பழைய நினைவு அலைகளில்
நிற்க முடியாமல் தவிக்கும்
எத்தனையோ இதயங்கள்
மீண்டும் நட்பு துளிர்க்காதா
என்று ஏங்கும்
உண்மையான அன்பு எப்போதும்
பகைமை பராட்டு வதில்லை
அவை தற்செயலாய் சூழும் மேகம் போல
குறுகிய இடைவேளைகளில்
அனைத்தும் மன்னிக்கப்படும்
நீளும் மௌனங்கள்
பாலை நிலத்து பகல்கள்
சுட்டெரிக்கும் நினைவுகளால்
மனம் வெதும்பும்
மறப்பதும் மன்னிப்பதும் தான்
கால சூழற்சியை இன்னும்
துரிதப்படுத்துகின்றன
இதயங்களின் பிரிவு
அணுப் பிளவின் தாக்கத்தைவிட
அதிகம் பாதிக்கிறது
சிலர் மட்டும்
பயணித்த சிறகுகளை
அடியோடு மறந்துவிடுகின்றனர்
பலர் இன்னும்
நீளும் இரவுகளின்
நீளம் குறையாதா
எண்ணும் ஏக்கத்தோடு
கால சக்கரத்தினை
கண் கொட்டாமல் பார்க்கின்றனர்.
- சே. தரணி குமார்
2 comments:
//ஒரு பட்டுப்போன நட்பின்
வேர்களில் எப்போதும்
மிச்சமிருக்கும் ஒருசில
நினைவெண்ணும் நீர்த்துளிகள்//
அருமையான வரிகள். நல்ல கவிதை. அமைப்பு ஜோர்.
// பராட்டு வதில்லை //
திருத்தவும்.
ரேகா ராகவன்.
http://www.rekharaghavan.blogspot.com/
நல்லாயிருக்கு.
Post a Comment